கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை, மீட்புப் பணிகள் தீவிரம்

கேரள மாநிலத்தில் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை மீட்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கேரள மாநிலத்தில் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை மீட்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

கேரள மாநிலத்தின் புதியிடம் என்ற பகுதியில் உள்ள வீட்டில் உள்ள கிணற்றில் சிறுத்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிணற்றுக்குள் சிறுத்தை இருந்ததை அந்த வீட்டின் உரிமையாளர் ஜோஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் காலையில் பார்த்துள்ளனர். அவர்கள் வழக்கம்போல் வீட்டிற்கு தண்ணீர் பிடிப்பதற்காக மோட்டாரை இயக்கியுள்ளனர். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் தண்ணீர் வரவில்லை. இதனால் குழப்பமடைந்த அவர்கள் கிணற்றில் பார்த்தபோது கிணற்றில் சிறுத்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளர் கூறியதாவது: “ நாங்கள் கிணற்றில் சிறுத்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தோம். சிறுத்தை எங்களது கிணற்றில் உள்ள தண்ணீர் குழாய்களை சேதப்படுத்தியதால் தண்ணீர் வரவில்லை.” என்றார்.

வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: “ கிணற்றின் மேலே இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்ட வலை இருந்த போதிலும் எப்படியோ சிறுத்தை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது. சிறுத்தையினை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாங்கள் இது தொடர்பாக தமிழக வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களது உதவியினை கேட்டுள்ளோம். சிறுத்தையை மீட்க உரிய கருவிகளுடன் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறுத்தை எந்த ஒரு பாதிப்புமின்றி ஆரோக்கியமாக இருக்கிறது. கிணற்றுக்குள் இருக்கும் நீரை வெளியேற்றி சிறுத்தையினை மீட்க உள்ளோம்.” என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com