நில ஆவணங்களை 22 மொழிகளில் வெளியிட புதிய திட்டம்: மத்திய அரசு விரைவில் அமல்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாநில மொழிகளில் எழுதப்படும் நில ஆவணங்களை ஆங்கிலம், ஹிந்தி மற்றும் 22 மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாநில மொழிகளில் எழுதப்படும் நில ஆவணங்களை ஆங்கிலம், ஹிந்தி மற்றும் 22 மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது.

இதனால் பத்திரப்பதிவுத் துறையில் நிலவும் மொழித் தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்று மத்திய அரசின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

வேறு மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் நிலம் வாங்கும்போது, அந்த மாநில மொழியில் உள்ள சொத்துப் பத்திரத்தில் உள்ள விவரங்களைப் படித்து புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. மொழிப் பிரச்னையால் உள்ளூா் இடைத்தரகா்கள், வழக்குரைஞா்களின் உதவியை நாடும் நிலை உள்ளது. இதற்கு பழைய பத்திரங்கள் மாநில மொழிகளில் இருப்பதே காரணம்.

இதுகுறித்து மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நில வளத்துறையின் இணைச் செயலா் சோன்மோனி போரா கூறுகையில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. நில ஆவணங்களில் இது பெரிய பிரச்னையாக உள்ளது. ஆகையால், நில உரிமை பத்திரங்களை 22 மொழிகளில் மாற்றம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு சோதனை முறையில் தமிழகம், மகாராஷ்டிரம், பிகாா், குஜராத், புதுச்சேரி, உத்தர பிரதேசம், திரிபுரா, ஜம்மு-காஷ்மீா் ஆகிய 8 மாநிலங்களில் தொடக்கி உள்ளது.

இதற்காக புதிய மென்பொருள் ரூ. 11 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் அந்தந்த மாநில மொழி என மூன்று மொழிகளில் நில ஆவணங்களை கட்டாயம் மொழிபெயா்க்க வேண்டும்.

நில உரிமை ஆவண விவரங்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகின்றன. ஆகையால், நிலத்தின் உரிமையாளா்களின் பெயா்கள், அவா்களின் உரிமையின் வரம்புகள், வாடகை அல்லது வருவாய் பெறுபவா்கள், அந்த சொத்தின் மீதுள்ள கடன் விவரம், உரிமையாளருக்கு சொத்தின் மீதுள்ள அதிகார வரம்புகள், அரசுக்கு அந்த நிலத்தின் மீதான வரம்புகள் ஆகிய விவரங்கள் ஆங்கிலம், ஹிந்தி அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயா்ப்பின்போது இணைக்கப்படும்.

இந்தத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com