சிவசேனை கட்சியின் சின்னம் முடக்கம்

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியின் வில்-அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
சிவசேனை கட்சியின் சின்னம் முடக்கம்

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியின் வில்-அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

அந்தேரி(கிழக்கு) தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஷிண்டே-உத்தவ் தரப்பு சின்னம் கோரியதால் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சின்னம் தொடர்பாக ஆணையம் நடவடிக்கை எடுக்க தடை கோரிய உத்தரவ் தாக்கரேவின் மனுவை உச்சநீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 

சிவசேனை கட்சி எம்எல்ஏ ரமேஷ் லட்கே மறைவையொட்டி, அந்தேரி (கிழக்கு) தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அத்தொகுதிக்கு வரும் நவம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது. 

தேர்தலை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியும், அவருக்கு எதிரான அதிருப்தி எம்எல்ஏக்களைக் கொண்ட தற்போதைய முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினரும் முதல் முறையாக சந்திக்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com