குழந்தை திருமணம் கொடி கட்டிப் பறக்கும் மாநிலம்? 

பெண்களுக்கு எதிரான குற்றங்களால் மிகவும் புகழ்பெற்ற ஜார்க்கண்ட் மாநிலம்தான், நாட்டிலேயே அதிக குழந்தைகள் திருமணம் நடக்கும் மாநிலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
குழந்தை திருமணம் கொடி கட்டிப் பறக்கும் மாநிலம்? 
குழந்தை திருமணம் கொடி கட்டிப் பறக்கும் மாநிலம்? 


ராஞ்சி: சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களால் மிகவும் புகழ்பெற்ற ஜார்க்கண்ட் மாநிலம்தான், நாட்டிலேயே அதிக குழந்தைகள் திருமணம் நடக்கும் மாநிலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்ட மக்கள்தொகை மாதிரி கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்திருக்கும் தகவல்கள் நிச்சயம் மாநிலத்தின் பெண் சமுதாயத்தின் மீது கவலையை ஏற்படுத்துகிறது.

இந்த ஆய்வில் தெரிய வந்திருப்பது என்னவென்றால், ஜார்க்கண்ட் மாநிலத்தில், சிறுமிகள் திருமண வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்யும் சராசரி 5.8 ஆக உள்ளது.

அதாவது, நாட்டில் 18 வயதாவதற்கு முன்பே நடக்கும் குழந்தைகள் திருமணத்தின் விகிதம் 1.9 ஆக உள்ளது. கேரளத்தில் இது 0.0 ஆகவும், ஜார்க்கண்டில் 5.8 ஆகவும் உள்ளது.

இந்த மக்கள்தொகை மாதிரி கணக்கெடுப்பு, கருவுறுதல், குழந்தை பிறப்பு, குழந்தை இறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அடிப்படையாக வைத்து சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகையை கணக்கிட்டு இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு, கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில்தான், மொத்த பெண்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு 21 வயது ஆவதற்கு முன்பே திருமணம் செய்யப்படுகிறது. 21 வயது ஆவதற்கு முன்பே பெண்களுக்கு திருமணம் ஆகம் விகிதமானது நாட்டில் 29.5 சதவீதமாக இருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் 54.9 சதவீதமாகவும் ஜார்க்கண்டில் 54.6 சதவீதமாகவும் உள்ளது.

அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபர், சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் நான்கு நாள்களுக்குப் பின் சிறுமி பலியானார்.

இதுபோல, காதலிப்பதாகக் கூறி, சிறுமியை பலாத்காரம் செய்த நிலையில், அவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தொடர்ந்து சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை ஜார்க்கண்ட் மாநில பெண்கள் சமுதாயத்தின் மீதான கவலையை அதிகரிக்கச் செய்வதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com