இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் கட்டாயம்: புதுச்சேரி அரசு அதிரடி

சாலை விபத்துகள் அதிகரித்து வருவதன் காரணத்தால் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்புறம் அமர்ந்து பயணிப்பவர் என இருவருமே கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சாலை விபத்துகள் அதிகரித்து வருவதன் காரணத்தால் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்புறம் அமர்ந்து பயணிப்பவர் என இருவருமே கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய உத்தரவினை போக்குவரத்துத் துறை அதிகாரி ஏ.எஸ்.சிவக்குமார் அறிவித்தார். அதன்படி, தற்போது வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் பின்புறம் அமர்ந்து பயணிப்பவர் என இருவருமே கண்டிப்பாக தலைக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி ஏ.எஸ்.சிவக்குமார் கூறியதாவது: “ இந்த புதிய அறிவிப்பினை பின்பற்றதாவர்களுக்கு முதல் முறை ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும். தொடர்ந்து விதிகளை மீறி வரும் நிலையில் அவர்களது வாகன ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். தலைக்கவசம் அணிவது தவிர்த்து, வாகனங்கள் ஓட்டும்போது கைப்பேசியில் பேசிக் கொண்டு செல்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன்னதாக தலைக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்ற போதிலும் தற்போது அதிகரித்து வரும் விபத்துகளால் தலைக்கவம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 445 இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர். தலைக்கவசம் அணியாமல் சென்றதே அவர்கள் உயிரிழப்பதற்கு முக்கிய காரணம். கடந்த 4 மணி நேரத்தில் மட்டும் புதுச்சேரியில் இருசக்கர வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com