ஆற்றில் விழுந்த 3 வயது சிறுமியை தேடும் பணி தீவிரம்

உத்தரப் பிரதேசத்தில் 3 வயது சிறுமி யமுனை ஆற்றில் விழுந்து காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

உத்தரப் பிரதேசத்தில் 3 வயது சிறுமி யமுனை ஆற்றில் விழுந்து காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: “ ஆற்றில் தவறி விழுந்த சிறுமி, தனது மாமா பவன் சதுர்வேதியுடன் நேற்று (அக்டோபர் 8) இரவு தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக வந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் அரங்கேறியுள்ளது. சிறுமி அவருடைய மாமாவுடன் ஸ்கூட்டரில் வந்துள்ளார். ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்ததால் ஆற்றுக்குள் விழுந்தது.

ஸ்கூட்டரில் பயணித்த மற்ற இரு குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக ஆற்றில் விழாமல் தப்பினர். ஆனால், ஷிரின் என்ற மூன்று வயது சிறுமி மட்டும் நிலை தடுமாறி ஆற்றினுள் விழுந்தார். இதனையடுத்து, மீட்புப் படையினர் நேற்று இரவில் இருந்து இன்று ( அக்டோபர் 9) காலை வரை தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், சிறுமியை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.” என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com