தில்லியில் சமூகநலத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கௌதம் ராஜிநாமா!

தில்லியில் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கௌதம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
தில்லியில் சமூகநலத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கௌதம் ராஜிநாமா!


தில்லியில் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கௌதம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

தில்லியில் தசரா நாளான அக்டோபர் 5 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி தலைவரும் தில்லியின் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான கெளதம் கலந்துகொண்டு பேசுகையில் இந்து கடவுள்களையும், மத மாற்றம் தொடர்பான சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார். இது குறித்து விடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்து கடவுள்களையும், மத மாற்றம் தொடர்பான சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபால் கௌதமை கடுமையாக விமர்சித்த பாஜக, முதல்வர் கேஜரிவால் அவரை அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரியது. 

மேலும், கௌதம் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், நாட்டில் வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டியது. 

இருப்பினும், சர்ச்சையைத் தொடர்ந்து, கெளதம் ஒரு விளக்கத்தை வெளியிட்டார், அதில்,  தனிப்பட்ட முறையில் அனைத்து தெய்வங்களையும் நான் மதிக்கிறேன் என்றும், மத மாற்றம் தொடர்பான அவமதிக்கும் வகையில் பேசுவதற்கு தான் கனவில் கூட நினைத்ததில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தில்லியில் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கௌதம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இந்து கடவுள்களையும், மத மாற்றம் தொடர்பான சர்ச்சைக்குரிய விதத்தில் தான் பேசியதாக சமூக ஊடகங்களில் விடியோ வைரலாகி வருவதை அடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com