தாய்மொழியில் கல்வி கற்பிப்பதற்கு புதிய தேசிய கல்விக்கொள்கை வழிவகுத்துள்ளது: உள்துறை அமைச்சர் அமித் ஷா

தாய்மொழியில் கல்வி கற்பிப்பதற்கு புதிய தேசிய கல்விக் கொள்கை வழிவகுத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா

தாய்மொழியில் கல்வி கற்பிப்பதற்கு புதிய தேசிய கல்விக் கொள்கை வழிவகுத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குவஹாட்டியில், இரண்டு நாள் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி குழு கூட்டத்தில் பேசிய அமித் ஷா, அனைத்து மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதன் மூலம் நாடு வளர்ச்சி அடையும் என்றும், தொடக்கக் கல்வியை தாய்மொழியில் கற்பிப்பதற்கு புதிய தேசிய கல்விக் கொள்கை வழிவகுத்துள்ளதாக கூறினார். 

மாநிலங்களில் உள்ள தீவிரவாத பிரச்னைக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கும் மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. 

அண்மையில் தொடங்கப்பட்டுள்ள வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையத்தை மாநிலங்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அமித் ஷா, மழைவெள்ளத்தை எதிர்கொள்வது, வனப்பகுதி விரிவாக்கம், சுற்றுலாவை ஊக்குவிப்பது போன்றவற்றிக்கு இந்த மையம் பெரிதும் உதவிடும் என்றும் கூறினார். 

பின்னர் அசாம் மாநில காவல்துறை கண்காணிப்பாளர் மாநாட்டை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.

எஞ்சியிருக்கும் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் முன்னேற்றம் அடைய அமைதியான வடக்கு கிழக்குக்கு மற்றும் வளமான அசாம் தேவை என்று அமித் ஷா கூறினார். 

மேம்படுத்தப்பட்ட சட்டம் ஒழுங்கு நிலைமை காரணமாக அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் மக்களுடன் நட்புடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அசாம் காவல்துறையை அமித் ஷா கேட்டுக் கொண்டார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மேம்பட்டுள்ளதால், மக்களை மையப்படுத்திய நடவடிக்கைகளுக்கு காவல்துறை தற்போது முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினார்.

இரண்டு நாள் மாநாட்டின் தொடக்க அமர்வில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள எஸ்பிக்கள், காவல்துறை உயர் அதிகார்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய  சர்மா, தீவிரவாதம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக அசாம் போலீசார் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கடைபிடிக்க வேண்டும். சைபர் தொடர்பான குற்றங்களை முறியடிக்கும் பணியில் தீவிரம் காட்டம் வேண்டும் அவர் வலியுறுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com