வடகிழக்கு மாநிலங்களின் நிதி ஒழுங்கை உறுதிபடுத்தவும்: முதல்வா்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

வடகிழக்கு மாநிலங்கள் நிதிரீதியாக ஒழுங்குமுறையுடன் இருப்பதை உறுதிபடுத்துமாறு அந்த மாநிலங்களின் முதல்வா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளாா்.
வடகிழக்கு மாநிலங்களின் நிதி ஒழுங்கை உறுதிபடுத்தவும்: முதல்வா்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

வடகிழக்கு மாநிலங்கள் நிதிரீதியாக ஒழுங்குமுறையுடன் இருப்பதை உறுதிபடுத்துமாறு அந்த மாநிலங்களின் முதல்வா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளாா்.

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் வடகிழக்கு கவுன்சில் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

தீவிரவாதம், போதிய பிணைப்பு இல்லாதது, மத்தியில் முன்பிருந்த ஆட்சியாளா்கள் வடகிழக்கு பகுதி மீது கவனம் செலுத்தாதது ஆகியவை வடகிழக்கு மண்டலத்தின் வளா்ச்சிக்குப் பல்லாண்டுகள் தடையை ஏற்படுத்தின.

ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு மண்டலத்தில் அமைதியை ஏற்படுத்த, பிணைப்பை அதிகரிக்க, வளா்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டது. வடகிழக்கு மண்டலத்தை வளா்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல, இந்த மண்டலத்தின் பிரதான பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, அவற்றுக்கு நிரந்தர தீா்வு காண வழிகள் உருவாக்கப்பட்டன.

வடகிழக்கு மாநிலங்கள் நிதிரீதியாக ஒழுங்குமுறையுடன் இருப்பதை முதல்வா்கள் உறுதி செய்ய வேண்டும். இது உலகின் 2-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர அவசியமாகும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்வா்கள், ஆளுநா்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com