court_order
court_order

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

ராஜஸ்தான் சிறப்பு நீதிமன்றம் 2020 பிப்ரவரியில் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கோட்டா: ராஜஸ்தானில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட லாலாராம் மீனா (24) மற்றும் முனேஷ் பைரவா (23) ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி பால் கரிஷ்ண மிஸ்ரா நேற்று (திங்கள்கிழமை) தீர்ப்பளித்ததுடன், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளதாக அரசு வழக்கறிஞர் மகாவீர் பிரசாத் மேக்வால் தெரிவித்தார்.

பூண்டியின் ஜென்டோலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த குற்றம் நடந்தேறியுள்ளது. விசாரணையின் போது 15 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், 29 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் மகாவீர் பிரசாத் மேக்வால் தெரிவித்துள்ளார்.

தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜாமீனில் வெளிவந்த இரண்டு குற்றவாளிகளும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com