இந்தியாவிடமிருந்து 62 லட்சம் கொசுவலைகளை வாங்கும் பாகிஸ்தான்

தொடர் வெள்ளம் காரணமாக கொசுக்களால் பரவும் நோய்களுடன் பாகிஸ்தான் போராடி வரும் நிலையில், இந்தியாவிலிருந்து 62 லட்சம் கொசு வலைகளை வாங்க பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவிடமிருந்து 62 லட்சம் கொசுவலைகளை வாங்கும் பாகிஸ்தான்


இஸ்லாமாபாத்: தொடர் வெள்ளம் காரணமாக கொசுக்களால் பரவும் நோய்களுடன் பாகிஸ்தான் போராடி வரும் நிலையில், இந்தியாவிலிருந்து 62 லட்சம் கொசு வலைகளை வாங்க பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் இன்று (செவ்வாய்கிழமை) அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அதிகாரிகளின் இது குறித்து தெரிவிக்கையில், உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்கான கொசு வலைகளைப் பெற குளோபல் ஃபண்ட் வழங்கிய நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி வருகிறது என்று ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது. 

அதே லேலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 32 மாவட்டங்களில் மலேரியா வேகமாகப் பரவி வருவதால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பிளாஸ்மோடியம், ஃபால்சிபாரம் பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் சிந்து, பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தான் ஆகிய 26 மாவட்டங்களில் கொசு வலைகளை வாங்க உலகளாவிய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக குளோபல் ஃபண்ட் இந்தியாவிலிருந்து இந்த வலைகளை வாங்க முன்வந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இந்தியாவில் இருந்து கொசுவலை வாங்குவதற்கு அனுமதி வழங்குமாறு வர்த்தக அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். அனுமதித்தால், சில நாட்களுக்குள் தேவையான எண்ணிக்கையிலான கொசு வலைகளை ஏற்பாடு செய்வதாக குளோபல் ஃபண்ட் உறுதியளித்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com