சிம்லாவின் 12 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்!

சிம்லாவின் மக்கள் தொகை அதிகம் உள்ள கிருஷ்ணாநகரில் உள்ள அரசுப் பள்ளியில் ஸ்மார் சிட்டி திட்டத்தால், தற்போது ஸ்மார்ட் வகுப்புகள் வசதி செய்யப்பட்டுள்ளது. 
சிம்லாவின் 12 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்!

சிம்லாவின் மக்கள் தொகை அதிகம் உள்ள கிருஷ்ணாநகரில் உள்ள அரசுப் பள்ளியில் ஸ்மார் சிட்டி திட்டத்தால், தற்போது ஸ்மார்ட் வகுப்புகள் வசதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் கூறுகையில், 

ஸ்மார்ட் திட்டத்தை மதிப்பாய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் செயல்படுத்தப்படுகிறது. மாநில தலைநகரில் உள்ள 10 பள்ளிகளில் 33 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இரண்டாவது கட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சிம்லா இடம் பிடித்துள்ளது. அதன் பின்னர், பல திட்டங்கள் தொடங்கப்பட்டன, அவற்றில் பல முடிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். கடந்த 2 ஆண்டுகளில் மக்கள் மாற்றத்தை உணர முடியும் என்றார். 

சிம்லாவின் பள்ளியை தொழில்நுட்பம் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்குவதே முன்னுரிமை என்றார். நாங்கள் 12 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்தோம், ஒவ்வொரு பள்ளியிலும் கிட்டத்தட்ட மூன்று ஸ்மார்ட் வகுப்புகள் உள்ளன. இதுதவிர சில சிவில் வேலைகளும் நடைபெற்று வருகின்றது. 

கிருஷ்ணாநகர், சோட்டா சிம்லா, காலினி, சஞ்சௌலி, துத்திகண்டி, பக்லி, போயலேகஞ்ச், டோட்டு, சிம்லா, சம்மர்ஹில், லக்கர் பஜார், போர்ட்மோர் மற்றும் லால்பானி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் உள்ளன.

இந்த ஸ்மார்ட் வகுப்புகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. 

இதுகுறித்து இயக்குநர் (நகர்ப்புற வளர்ச்சி) மன்மோகன் சர்மா கூறுகையில், 

ஸ்மார்ட் வகுப்பறைகளுக்குப் பிறகு, இப்போது குடிமராமத்து பணிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. மழைக்காலம் காரணமாக பணிகள் தாமதமாகிறது. சமீபத்தில் அமைச்சர் ஆய்வு செய்து, இந்த பள்ளிகள் அனைத்திலும் குடிமராமத்து பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் செய்யப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com