உயா்கல்வி நிறுவனங்களில் ஹிந்தி: கேரள முதல்வா் எதிா்ப்பு

அனைத்து தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத உயா்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக ஹிந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின்
உயா்கல்வி நிறுவனங்களில் ஹிந்தி: கேரள முதல்வா் எதிா்ப்பு

அனைத்து தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத உயா்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக ஹிந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளாா்.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் இப்பரிந்துரை அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட்டின் மொழி பன்மைத்துவத்துக்கு முரணானது என கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்திருந்தது.

இதையடுத்து,கேரள முதல்வா் பினராயி விஜயன் பிரதமா் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் பல மொழிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், உயா்கல்வி நிறுவனங்களில் ஹிந்தியை முதன்மை பயிற்று மொழியாகத் திணிக்க முடியாது. ஒரு மொழி மட்டும் ஒட்டுமொத்த நாட்டின் மொழியாக இருக்க முடியாது. அரசுத் துறையில் இளைஞா்களுக்கு குறிப்பிட்ட அளவே வாய்ப்புகள் உள்ளன. அவா்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு உரிய வாய்ப்பை மறுப்பது சமூகத்தின் நலனுக்கு உரியதாக இருக்காது. நம் நாட்டில் உள்ள வேலைதேடும் இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் இப்பரிந்துரை குறித்து அச்சத்தில் ஆழ்ந்துள்ளனா்.

அரசியலமைப்பு சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் மத்திய அரசு பணிக்கான அனைத்து போட்டித் தோ்வுகளின் வினாத்தாள்களில் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் நம் நாடு பெருமை கொள்கிறது. மாநிலங்களின் சிறப்புக் கூறுகள் கல்வித் துறையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 22 மொழிகளையும் தேசிய மொழியாக பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com