மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தற்போது  அதிகரித்து வருவதால், 11. 30 மணியளவில் மேட்டூர் அணையிலிருந்து 35 ஆயிரம் கன அடி  தண்ணீர் திறந்து விடப்படும் என அணை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி  தண்ணீர் எந்த நேரத்தில் திறக்கப்படலாம் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் அணையின் நீா்மட்டம் உயரத் தொடங்கியது. புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் இரண்டாவது முறையாக அணை மீண்டும் நிரம்பியது.

இதையடுத்து அணையின் உபரிநீா்ப் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீா்திறந்து விடப்பட்டுள்ளது. 25 நாள்களுக்குப் பிறகு அணையின் உபரிநீா்ப் போக்கி மதகுகள் புதன்கிழமை காலை 5.30 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. முன்னதாக எச்சரிக்கை சங்கு ஒலிக்கப்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் எந்த நேரத்தில் திறக்கப்படலாம் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழக்கிழமை 11. 30 மணியளவில் மேட்டூர் அணையிலிருந்து 35 ஆயிரம் கன அடி  தண்ணீர் திறந்து விடப்படும் என முதலில் அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் எந்த நேரத்தில் திறக்கப்படலாம் என அணை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது, 28 ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.  எனவே, காவிரி கரையோர உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், அவர்களின் உடமைக்கும் உயிருக்கும் இழப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர், அனைத்துத் துறை அரசு அதிகாரிகளையும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com