பாதுகாப்பு துறையில் இறக்குமதியை மட்டும் நம்பியிருக்க கூடாது: ராஜ்நாத் சிங்

 பாதுகாப்புத் துறை தொடர்பான உற்பத்தி பாகங்களுக்கு இறக்குமதியை மட்டுமே இந்தியா  நம்பியிருக்க கூடாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

உலகம் முழுவதும் உள்ள பாதுகாப்புத் துறை சார்ந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனை தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: “ தன்னிறைவு என்பது உலக நாடுகளில் இருந்து தனிப்பட்டு இருப்பது என்று அர்த்தமாகாது. நம் நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான பொருட்களை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நாமே தயாரித்துக் கொள்ள வேண்டும். உலகின் மற்ற நாடுகளுடன் பாதுகாப்புத் தொடர்பான ஒத்துழைப்பு இருக்க வேண்டும். இருப்பினும், பாதுகாப்புத் துறை சார்ந்த அனைத்து உதிரிபாகங்கள் மற்றும் பொருட்களுக்கு நாம் எப்போதும் பிற நாடுகளை நம்பியிருக்க முடியாது, நம்பிருக்கவும் கூடாது.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com