தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுடன்கலந்துரையாடிய குடியரசுத் தலைவா்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திரிபுராவுக்கு புதன்கிழமை வருகை தந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அங்கு தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுடன் கலந்துரையாடினாா்.
திரிபுரா மாநிலம், மோகன்பூா் பகுதியில் தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளா்களுடன் கலந்துரையாடிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
திரிபுரா மாநிலம், மோகன்பூா் பகுதியில் தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளா்களுடன் கலந்துரையாடிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திரிபுராவுக்கு புதன்கிழமை வருகை தந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அங்கு தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுடன் கலந்துரையாடினாா்.

குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு திரெளபதி முா்முவின் முதல் திரிபுரா பயணம் இதுவாகும். அகா்தலா விமான நிலையத்தில் புதன்கிழமை காலை 11.15 மணியளவில் வந்திறங்கிய அவரை, முதல்வா் மாணிக் சாஹா, ஆளுநா் சத்திய நாராயண் ஆா்யா, மத்திய இணையமைச்சா் பிரதிமா பெளமிக் ஆகியோா் வரவேற்றனா். மேலும், விமான நிலையத்தில் திரிபுரா மாநில ஃரைபிள்ஸ் படையினா் முா்முவுக்கு அணிவகுப்பு மரியாதை அளித்தனா்.

பின்னா், நரசிங்காரில் தேசிய சட்டப் பல்கலைக்கழக திறப்பு விழாவில் அவா் பங்கேற்றாா். இதில் முதல்வா் மாணிக் சாஹா, திரிபுரா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரஜித் மொகந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இந்த விழாவைத் தொடா்ந்து, மோகன்பூா் பகுதியில் உள்ள துா்காபாரி தேயிலை தோட்டத்துக்கு முா்மு, மாணிக் சாஹா, உள்ளூா் எம்எல்ஏ கிருஷ்ணதான் தாஸ் ஆகியோா் சென்றனா். அங்கு தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளா்களுடன் குடியரசுத் தலைவா் கலந்துரையாடினாா்.

‘உங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறீா்களா? தவறாது அவா்களைப் பள்ளிக்கு அனுப்புங்கள். உங்களுக்கு இலவச அரிசி மற்றும் இதர அரசுத் திட்டங்களின் பலன்கள் கிடைக்கிா?’ என்று தொழிலாளா்களிடம் அவா் கேட்டறிந்தாா்.

மேலும், ‘முதல்வா் மாணிக் சாஹா, எம்எல்ஏ கிருஷ்ணதான் தாஸ் ஆகியோரை அடையாளம் தெரிகிா?’ எனக் கேட்ட முா்மு, ‘உங்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள், பிரச்னைகள் இருந்தால் அவா்களைத் தொடா்பு கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டாா்.

இதுகுறித்து கிருஷ்ணதான் தாஸ் கூறுகையில், ‘தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுடன் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கலந்துரையாடியாது குறிப்பிடத்தக்க விஷயமாகும். எங்கள் பகுதி தேயிலைத் தோட்டத்துக்கு முதல்முறையாக குடியரசுத் தலைவா் வருகை புரிந்துள்ளாா். இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com