ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி இரு நாள்களில் ஒய்வு!

கர்நாடக ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான ஹேமந்த் குப்தா நாளை மறுநாள் (அக்டோபர் 16) பணி ஓய்வு பெற உள்ளார்.
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற  நீதிபதி இரு நாள்களில் ஒய்வு!

கர்நாடக ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான ஹேமந்த் குப்தா நாளை மறுநாள் (அக்டோபர் 16) பணி ஓய்வு பெற உள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான ஹேமந்த் குப்தா எப்போதுமே உச்ச நீதிமன்றத்தின் மிகப் பெரிய சொத்து என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் கூறியதாவது: “ ஹேமந்த் குப்தா எப்போதுமே அவரது சிறப்பான பங்களிப்பை கொடுக்கத் தவறியதில்லை. அவர் எப்போதுமே உச்ச நீதிமன்றத்தின் மிகப் பெரிய சொத்து. அவர் எல்லா நலமும் பெற்று வாழ நாங்கள் வாத்துகிறோம்.” என்றார்.

 ஓய்வு பெறுவது குறித்து நீதிபதிகள் முன்னிலையில் ஹேமந்த் குப்தா பேசியதாவது: “ தனிப்பட்ட முறையில் நீதிபதியாக எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளன. அனைத்து வழக்கறிஞர்களிடம் இருந்தும் எனக்கு உதவி கிடைத்தது. உண்மையில் 20 ஆண்டுகளாக நீதிபதியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களை கற்றுக் கொண்டேன். நீங்கள் அனைவரும் இத்தனை ஆண்டுகளாக எனது இந்தப் பயணத்தில் உதவியாக இருந்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.” என்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 2ல் ஹேமந்த் குப்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்வு பெற்றார். தற்போது அவரது ஓய்வானது உச்ச நீதி மன்றத்தில் தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை 28 ஆக குறைக்கும். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியையும் சேர்த்து 34 நீதிபதிகள் வரை இருக்கலாம்.

நீதிபதி ஹேமந்த் குப்தா நேற்று (அக்டோபர் 13) கர்நாடக ஹிஜாப் வழக்கில், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பதால் கர்நாடக உயர் நீதிமன்ற தடை செல்லும் என தீர்ப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com