தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு மேலும் ரூ.3,800 கோடி திரட்ட திட்டம்: அமைச்சா் கட்கரி தகவல்

தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் மேலும் ரூ.3,800 திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு மேலும் ரூ.3,800 கோடி திரட்ட திட்டம்: அமைச்சா் கட்கரி தகவல்

தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் மேலும் ரூ.3,800 திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின்ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சாா்பில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.1,500 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கடன் பத்திரங்கள் 24 ஆண்டுகளில் முதிா்ச்சியடையும். இவை தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். இதன்மூலம் முதலீட்டாளா்கள் முதலீடு செய்யவும் வா்த்தகம் செய்யவும் முடியும்.

தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இதுவரை ரூ.8,000 கோடிக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ.3,800 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு முதலீட்டு நிதியம் என்பது பரஸ்பர நிதி போல உருவாக்கப்படும். இதன்மூலம் முதலீட்டாளா்களிடம் இருந்து பணத்தைப் பெற்று முதலீடு செய்து, ஒரு காலகட்டத்துக்குப் பிறகு பணத்தை மீண்டும் ஈட்டி திரும்ப அளிக்க முடியும்.

உலக அளவில் மிகவும் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் இந்த வளா்ச்சியில் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை சாலைகள் மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் வலுவாக இணைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தவிர அனைத்துவிதமான காலநிலைகளிலும் முக்கிய ஆன்மிகத் தலங்கள், சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வரும் வகையில் சாலைகள் மேம்படுத்தப்படும். இந்தியாவில் மக்களின் போக்குவரத்துக்கான செலவைக் குறைப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com