சட்டவிரோத ஆயுதக் கும்பலைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தது தில்லி காவல்துறை!

சட்டவிரோத ஆயுதக் கும்பலை சேர்ந்த நான்கு பேரை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர். 
சட்டவிரோத ஆயுதக் கும்பலைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தது தில்லி காவல்துறை!


சட்டவிரோத ஆயுதக் கும்பலை சேர்ந்த நான்கு பேரை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிண்ட் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ஓஜா மற்றும் லக்ஷ்மி நாராயண் ஆவார். மேலும், உ.பி.யின் இட்டாவாவைச் சேர்ந்த ஜனக் சிங் மற்றும் தில்லியில் உள்ள ஜாப்ராபாத்தைச் சேர்ந்த ரஷீத் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

ஜஹாங்கிர்புரியில் காவல்துறையினர் முயற்சியின்பேரில் ஜனக் சிங்கைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4  அரை தானியங்கி கைத்துப்பாக்கிகள் மற்றும் 16 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறப்பு காவல் ஆணையர் ரவீந்திர யாதவ் தெரிவித்தார்.

லாரி ஓட்டுநரான சிங், 2019 ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேசத்திலிருந்து தில்லி மற்றும் உத்தரகண்டில் உள்ள ஹல்த்வானிக்கு சட்டவிரோத துப்பாக்கிகளை வழங்கத் தொடங்கினார் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, 2021ஆம் ஆண்டு ஹல்த்வானியில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தில்லி-என்சிஆர் பகுதியில் ஆயுதக் கடத்தல் வலையமைப்பை உருவாக்கி, கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பகுதியில் சுமார் 70 சட்டவிரோத கைத்துப்பாக்கிகளை சப்ளை செய்துள்ளார்.

ஓஜா மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் என்ற இடத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிக்கும் பிரிவை நடத்தி வந்தார். உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தில்லி-என்.சி.ஆரில் உள்ள குற்றவாளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த ரஷீத்துக்கு, சட்டவிரோதத் துப்பாக்கிகளை சப்ளை செய்ததையும் சிங் வெளிப்படுத்தினார்.  ஜாஃப்ராபாத் பகுதியில் இருந்து ரஷீத் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com