மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன்

புதிய மதுபான கொள்கை மோசடி புகாரில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நாளை விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன்

புதிய மதுபான கொள்கை மோசடி புகாரில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நாளை விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

தில்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்ாக கூறி, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஐஏஎஸ் அதிகாரி, மூத்த அதிகாரிகளின் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினா். 

இந்த வழக்கில் 15 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள சிபிஐ, அதில் முதல் நபராக மணீஷ் சிசோடியாவை சோ்த்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்திவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவா்கள் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனா். 

2024-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலுக்கு முன்னதாக பிரதமா் நரேந்திர மோடிக்கு சவாலாக ஏற்பட்டுள்ள கேஜரிவாலின் எழுச்சியால் ‘குழம்பியுள்ள’ பாஜக, தில்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் குற்றம் சாட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com