அக்.17 இல் குஜராத்தில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்ட அட்டைகள் விநியோகம்!

குஜராத்தில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்ட டிஜிட்டல் அட்டைகள் விநியோகத்தை அக்டோபர் 17 ஆம் தேதி மாலை 4 மணிக்கு காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

மத்திய அரசு சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும். இதன்படி, ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.   

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம், குஜராத்தில் 2019 ஆம் ஆண்டு, இந்த திட்டங்களை ஒருங்கிணைத்து, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கிய திட்டம் என்று மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், குஜராத்தில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்ட டிஜிட்டல் அட்டைகள் விநியோகத்தை அக்டோபர் 17 ஆம் தேதி மாலை 4 மணிக்கு காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த டிஜிட்டல் அட்டைகளின் விநியோகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த பின்னர், குஜராத் முழுவதும் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் அச்சிடப்பட்ட 50 லட்சம் வண்ணமயமான ஆயுஷ்மான் அட்டைகள் அவர்களின் வீடுகளுக்கே சென்று  வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com