காங். தலைவர் தேர்தல்: வாக்களித்தார் அசோக் கெலாட்!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கட்சி அலுவலகத்தில் வாக்களித்தார்.
காங். தலைவர் தேர்தல்: வாக்களித்தார் அசோக் கெலாட்!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கட்சி அலுவலகத்தில் வாக்களித்தார்.

அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தில்லி உள்பட நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் இன்று காலை  10 மணிக்குத் தொடங்கியது.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தில்லியில் வாக்களிக்கின்றனர்.

பிசிசி தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, தலைமைக் கொறடா மகேஷ் ஜோஷி, அமைச்சர்கள் பிடி கல்லா, விஸ்வேந்திர சிங், மம்தா பூபேஷ் மற்றும் பல பிரதிநிதிகளும் வாக்களித்தனர்.

இதையடுத்து, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வாக்களித்தார். அவர் வாக்களிக்கும் படத்தையும் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

பிசிசி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிக்க 2 சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மாநிலத்தில் 414 பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியில் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com