துரந்தோ ரயிலில் கொள்ளை: குறிப்பிட்ட ரயில்களுக்கு பாதுகாப்பு அளிக்க திட்டம்
துரந்தோ ரயிலில் கொள்ளை: குறிப்பிட்ட ரயில்களுக்கு பாதுகாப்பு அளிக்க திட்டம்

துரந்தோ ரயிலில் கொள்ளை: குறிப்பிட்ட ரயில்களுக்கு பாதுகாப்பு அளிக்க திட்டம்

ராஜதானி உள்ளிட்ட ரயில்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை கமாண்டர்களின் பாதுகாப்பு வழங்க மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.


கொல்கத்தா: புது தில்லி - ஹௌரா இடையேயான துரந்தோ ரயிலில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ராஜதானி உள்ளிட்ட ரயில்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை கமாண்டர்களின் பாதுகாப்பு வழங்க மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று, பிகாரில், ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் துரந்தோ ரயிலில் ஏறி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளைச் சம்பவம் நடந்த இந்த ரயிலுக்கு அரசு ரயில்வே காவலர்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இவர்கள் நள்ளிரவு 1 மணிக்கே பாட்னா ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பட்னா ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட நேரத்தில் 20 பேர் ஆயுதங்களுடன் ரயிலுக்குள் ஏறி, துப்பாக்கி முனையில் 7 முதல் 8 ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகளின் பொருள்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

துரந்தோ ரயிலிலேயே இப்படி நடந்தால், மற்ற ரயில்களின் பாதுகாப்பு என்ன நிலை என்று மக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

மத்திய அரசைக் கேட்டால், ஒவ்வொரு மாநிலத்தில் பயணிக்கும் ரயிலுக்கும் மாநில அரசுகள்தான் பாதுகாப்பளிக்க வேண்டும் என்கிறது. ஆனால், மாநில அரசுகளோ, அந்த அளவுக்கு தங்களிடம் போலீஸ் பலம் இல்லை என்கிறார்கள். இப்படி இரு தரப்பும் சொன்னால், பயணிகளின் பாதுகாப்புத்தான் கேள்விக்குறியாகிறது என்று புலம்புகிறார்கள் மக்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com