நேரடி ஒளிபரப்பு காப்புரிமை: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

உச்சநீதிமன்ற ஒளிபரப்புகளின் காப்புரிமை பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.
நேரடி ஒளிபரப்பு காப்புரிமை: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகளின் விசாரணையை யூ-டியூபில் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் நடைமுறை அண்மையில் தொடங்கப்பட்ட நிலையில், இந்த ஒளிபரப்புகளின் காப்புரிமை பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு முன் நடைபெறும் வழக்குகள் விசாரணையை முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யும் நடைமுறை கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடா்பான வழக்கு, நிா்வாகப் பணிகளில் மத்திய, தில்லி அரசுகள் இடையிலான பிரச்னை உள்ளிட்ட வழக்குகளின் விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

யூ-டியூப் பயன்பாட்டு விதிமுறைகளின்படி, அதில் மேற்கொள்ளப்படும் நேரடி ஒளிபரப்புகளுக்கான காப்புரிமையை அந்நிறுவனம் பெறுகிறது. ஆனால், நீதிமன்ற விசாரணை ஒளிபரப்பு மீதான காப்புரிமை, யூ-டியூப் போன்ற தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுவது கடந்த 2018-இல் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீா்ப்புக்கு எதிராக உள்ளது என்று கூறி முன்னாள் பாஜக தலைவா் கே.என்.கோவிந்தாச்சாா்யா மனு தாக்கல் செய்தாா்.

மேலும், விசாரணை ஒளிபரப்பு மீதான காப்புரிமையை பாதுகாக்க யூ-டியூப் நிறுவனத்துடன் சிறப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீது தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி பி.எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

முன்னதாக, உச்சநீதிமன்ற நேரடி ஒளிபரப்பு ஆரம்ப கட்டமாக யூ-டியூபில் மேற்கொள்ளப்படும்; பின்னா், உச்சநீதிமன்றத்தின் சொந்த தளங்களில் நேரடி ஒளிபரப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com