ராமர் பெயரும் ராகுல் பெயரும் 'ரா' வில் தொடங்குவது தற்செயலானது: நானா படோல்

ராமர் பெயரும் ராகுல் பெயரும் 'ரா' வில் தொடங்குவது தற்செயலானது: நானா படோல்

கடவுள் ராமர் மற்றும் ராகுல் காந்தியின் முதல் எழுத்து ஒன்றாக வருவது தற்செயலானது என மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறியுள்ளார்.

ராகுலின் ஒற்றுமை நடைப் பயணம் 150 நாட்களுக்கு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை திட்டமிடப்பட்டுள்ளது. நடைப் பயணத்தின் 41வது நாளில் இன்று (அக்.18) காலையில் ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் இருந்து ராகுலின் நடைப்பயணம் தொடங்கியது.

ராஜஸ்தான் அமைச்சர் பர்சதி லால் மீனா, “ராகுல் காந்தியின் பாத யாத்திரை வரலாற்று சம்பவம். கடவுள் ராமர் அயோத்தியாவிலிருந்து இலங்கைக்கு நடந்து சென்றார். ஆனால் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அதை விட அதிகமாக நடக்கவிருக்கிறார்” எனக் கூறினார்.

இது குறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறியதாவது:

நடைப் பயணமாக ராகுல் காந்தி செல்வது கடவுள் ராமர் போனது போலவும் சங்கராச்சாரியார் போனது போலவும்தான். ஆனால் மக்கள் ராகுல் காந்தி பயணத்தில் இணைந்துக் கொள்கிறார்கள். அதனால் இதை கடவுளுடன் ஒப்பிட வேண்டியதில்லை. இருவரின் பெயர்களின் முதலெழுத்து ‘ரா’வில் தொடங்குவது தற்செயலானது. பாஜக தலைவர்களை கடவுளுடன் ஒப்பிடுவது போல நாங்கள் ஒப்பிட மாட்டோம். கடவுள் எப்போதும் கடவுள். ராகுல் காந்தி ஒரு மனிதர். அவர் மனிதாபிமானத்துக்காக உழைப்பதை அனைவரும் பார்க்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com