சத் காலத்தில் யமுனை மாசுபடாமல் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது: கேஜரிவால்

சத் காலத்தில் யமுனை மாசுபடாமல் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது: கேஜரிவால்

சத் விழாக் காலத்தில் யமுனை மாசுபடாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த கேஜரிவால் தெரிவித்தார். 

சத் விழாக் காலத்தில் யமுனை மாசுபடாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த கேஜரிவால் தெரிவித்தார். 

கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சத் பூஜை கொண்டாட்டங்கள் பெரியளவில் இல்லாமல், அவரவர் வீடுகளிலேயே கொண்டாடப்பட்டது. ஆனால் இந்தாண்டு சத் பூஜை பெரியளவில் கொண்டாட உள்ளது. முன்பு போல் இந்தாண்டும் யமுனையின் மலைத்தொடர்களில் கொண்டாடப்படுகிறது. 

சத் கொண்டாட்டங்களால் யமுனை மாசுபடாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியில் தனது சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளார். 

கார்த்திகை மாதம், சுக்ல பக்ஷத்தின் ஆறாம் நாளில் சத் பூஜை கொண்டாடப்படுகிறது. சத் பூஜை என்பது சூரிய கடவுள் மற்றும் அவரது சகோதரியான சக்தி மாயா ஆகிய தெய்வங்களை முன்னிலைப்படுத்தி வணங்கப்படுவதாகும். இது சூரிய சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது. வட மாநிலங்களில் சத் பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

பெண்கள் தங்கள் குடும்ப நலனுக்காக விரதமிருந்து கடைப்பிடிக்கும் கடுமையான விரதங்களில் இதுவும் ஒன்று. முழங்கால் நீரில் நின்று சூரிய பகவானை பிரார்த்திப்பது இதன் சிறப்பாகும். 

சத் பூஜை 2022 அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. தில்லியில் இந்த திருவிழா மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com