உள்ளூர் வணிகங்களை ஊக்குவிக்குமாறு கோவா முதல்வர் வேண்டுகோள்! 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் வணிகங்களை ஊக்குவிக்குமாறு கோவா முதல்வர் குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
பிரமோத் சாவந்த்
பிரமோத் சாவந்த்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் வணிகங்களை ஊக்குவிக்குமாறு கோவா முதல்வர் குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தெற்கு கோவாவில் உள்ள லோலியம் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பரிசளித்த தென்னை மரத்தின் இலைகளால் ஆன விளக்கை, பனாஜியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்ததாக அவர் கூறினார். 

மாநில அரசின் ஸ்வயம்பூர்ணா கோவா மதிப்பாய்வின் ஒரு பகுதியாக, கோவா முழுவதிலும் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் சாவந்த் உரையாற்றினார். 

தீபாவளிக்கு உள்ளூர் மக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் உள்ளூர் வணிகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த பண்டிகை இருக்க வேண்டும் என்றார்.

கையில் செய்த விளக்கு, உண்ணக்கூடிய பொருள்கள், பூக்கள் என உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை மக்கள் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்க உதவும் என்றார். 

மாற்றுத்திறனாளி பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் தீபாவளிக்காக அவர்கள் தயாரித்த பொருள்களை விற்பனை செய்ய பல்வேறு இடங்களில் ஸ்டால்களை திறந்துள்ளனர். விலை சற்று அதிகமாக இருந்தாலும், இந்த பொருள்களை வாங்கி அவர்களை ஊக்குவியுங்கள் என்றார் சாவந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com