கடும் அதிர்ச்சி: நடைமேடைக் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிப்பு

ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைக் கட்டணத்தை ரூ.10ல் இருந்து 50 ரூபாயாக அதிகரித்து மேற்கு மண்டல ரயில்வே நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கடும் அதிர்ச்சி: நடைமேடைக் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிப்பு
கடும் அதிர்ச்சி: நடைமேடைக் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிப்பு


மும்பை: ரயில் நிலையங்களில் கூடும் மக்கள் கூட்டத்தைக் குறைக்கும் வகையில், ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைக் கட்டணத்தை ரூ.10ல் இருந்து 50 ரூபாயாக அதிகரித்து மேற்கு மண்டல ரயில்வே நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மும்பை மண்டலத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடைக் கட்டணம் ரூ.10லிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வு அக்டோபர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மும்பையின் முக்கிய ரயில்நிலையங்கள் மத்திய மும்பை, தாதர், போரிவாலி, பாந்த்ரா ஜங்ஷன், வாபி, வால்சத், உத்னா மற்றும் சூரத் ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்ந்துள்ளதால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

நடைமேடைகளில் அதிகக் கூட்டம் நிரம்பி வழிவதைத் தடுக்கவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், பயணிகள் சரியான நேரத்தில் ரயிலைப் பிடிக்கவும் இது வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com