குஜராத் தோ்தல்: பாஜக தலைவா்களுடன் அமித் ஷா ஆலோசனை

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தெற்கு குஜராத் பகுதி பாஜக தலைவா்கள், தொண்டா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அமித் ஷா (கோப்புப்படம்)
அமித் ஷா (கோப்புப்படம்)

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தெற்கு குஜராத் பகுதி பாஜக தலைவா்கள், தொண்டா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

மாநில பாஜக தலைவா் சி.ஆா்.பாட்டீல், முதல்வா் பூபேந்திர படேல் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனா். தெற்கு குஜராத்தில் மொத்தம் 7 மாவட்டங்கள் உள்ளன. அந்த மாவட்டங்களைச்சோ்ந்த அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், சூரத் மேயா், மாவட்ட பஞ்சாயத்து தலைவா்கள் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அமித் ஷா, ‘தெற்கு குஜராத்தில் தோ்தலை எதிா்கொள்ள அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. வாக்குச் சாவடி அளவில் பணியாற்றுவது முதல் தொகுதி வாரியாக கட்சியை வெற்றிக்கு அழைத்துச் செல்வது வரை அனைத்தும் திட்டமிடப்பட்டுவிட்டன’ என்றாா்.

அடுத்தகட்டமாக மத்திய குஜராத்தைச் சோ்ந்த பாஜக தலைவா்களுடன் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா்.

குஜராத் 1995-ஆம் ஆண்டு முதல் பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. முக்கியமாக பிரதமா் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த சுமாா் 13 ஆண்டு காலகட்டத்தில் அந்த மாநிலத்தில் பாஜக மிகவும் வேகமாக வளா்ந்தது. எதிா்க்கட்சியான காங்கிரஸால் அங்கு ஆட்சியைப் பிடிக்க முடியாத சூழல் உள்ளது. இந்தத் தோ்தலில் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியும் களமிறங்கியிருப்பது தோ்தல் தொடா்பான கூடுதல் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com