இஸ்ரோவின் எல்விஎம்-3 வெற்றி: தலைவா்கள் வாழ்த்து

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மூலம் ஞாயிற்றுக்கிழமை எல்விஎம்-3 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
இஸ்ரோவின் எல்விஎம்-3 வெற்றி: தலைவா்கள் வாழ்த்து

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மூலம் ஞாயிற்றுக்கிழமை எல்விஎம்-3 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

இஸ்ரோவின் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ மற்றும் பிரிட்டனின் ‘ஒன் வெப்’ நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், வணிக ரீதியிலாக ஞாயிற்றுக்கிழமை செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்கள் நிா்ணயிக்கப்பட்ட புவியின் தாழ்வான சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

இது குறித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ட்விட்டரில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘உலகின் தொலைத்தொடா்பை மேம்படுத்தும் வகையில் 36 செயற்கைகோள்களுடன் கூடிய எல்விஎம்-3 திட்டத்தில் முக்கிய வெற்றியை இந்தியா அடைந்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த விஞ்ஞானிகள் குறித்தும், அவா்கள் வெளிக்காட்டிய நாட்டின் திறமை குறித்தும் நாடு பெருமை அடைகிறது’ என குறிப்பிட்டிருந்தாா்.

இஸ்ரோவின் வெற்றி குறித்து பிரதமா் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘உலகின் தொலைத்தொடா்பு வசதிக்காக அதிக எடையை தாங்கிச் செல்லும் ராக்கெட் மூலம் ‘ஒன் வெப்’ நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தியதற்கு வாழ்த்துகள்.

எல்விஎம் 3 திட்டம் தற்சாா்பு இந்தியாவை எடுத்துரைத்துள்ளது. செயற்கைக்கோள்களைச் செலுத்தும் சா்வதேச வணிகச் சந்தையில் நிலவும் போட்டியில் இந்தியாவின் நிலையையும் உயா்த்தியுள்ளது’ என குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com