ராஜ்நாத் சிங்குடன் ரஷிய பாதுகாப்பு அமைச்சர் பேச்சு

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சொ்கேய் ஷாய்கு தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சொ்கேய் ஷாய்கு தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

“ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் சொ்கேய் ஷாய்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று உரையாடினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உக்ரைனில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.

உக்ரைனில் நிலவும் சூழல் குறித்து இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு ரஷிய அமைச்சர் விளக்கினார்.

இரு நாட்டிற்கிடையே மோதலை தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியாவின் நிலைபாட்டை மீண்டும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். அணு ஆயுதங்களை பயன்படுத்துவது மனித குலத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது என்பதால் அணுசக்தியை நாடக்கூடாது என்றும் கூறினார்.”

ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 8 மாதங்களை கடந்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றது. இதற்கு அமெரிக்க உள்பட உலகின் பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஐ.நா.வில் தொடர்ந்து இந்தியா நடுநிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com