‘ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம்’: காங்கிரஸ் எம்.பி. கருத்து

ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏன் அச்சிடக்கூடாது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி(கோப்புப்படம்)
காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி(கோப்புப்படம்)

ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏன் அச்சிடக்கூடாது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தி புகைப்படம் ஒருபுறமும், விநாயகர் மற்றும் லட்சுமியின் புகைப்படங்கள் மறுபுறமும் அச்சிட வேண்டும் என்று தில்லி முதல்வர் கேஜரிவால் நேற்று கருத்து தெரிவித்திருந்தார்.

இவரது கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி டிவிட்டரில் அரவிந்த் கேஜரிவாலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

“புதிதாக அச்சடிக்கப்படவுள்ள இந்திய ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏன் அச்சிடக்கூடாது? ஒருபுறம் காந்தியும், மறுபுறம் அம்பேத்கரின் புகைப்படமும் அச்சிட வேண்டும்.
 
அகிம்சைவாதம், சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு பற்றி பேசிய நவீன இந்தியாவின் ஆளுமை அம்பேத்கர்” எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com