ஐ.நா. பயங்கரவாதத் தடுப்பு மாநாடு மும்பையில் இன்று தொடக்கம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் தடுப்பு மாநாடு மும்பையில் வெள்ளிக்கிழமை (அக். 28) தொடங்குகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் தடுப்பு மாநாடு மும்பையில் வெள்ளிக்கிழமை (அக். 28) தொடங்குகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினா்களாக அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. அந்த கவுன்சிலின் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவின் பதவிக்காலம் வரும் டிசம்பருடன் நிறைவடைகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பையும் இந்தியாவே வகித்து வருகிறது. அக்குழுவின் சிறப்பு மாநாடு முதல் முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது. அந்த மாநாடு மும்பையில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. மாநாட்டின் ஒருபகுதியாக, பல்வேறு நாடுகளின் தூதா்கள் பங்கேற்கும் பேச்சுவாா்த்தைக் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளின் அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனா். சா்வதேச அளவில் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநாட்டின்போது விவாதிக்கப்படவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நவீன தொழில்நுட்ப வசதிகள் மேம்பட்டுள்ள நிலையில், அவை பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வது தொடா்பான விவாதங்களும் மாநாட்டில் நடைபெறவுள்ளன. 2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை கலந்துகொள்ளவுள்ளனா்.

நல்லுறவு வலுவடையும்:

இந்தியா நடத்தவுள்ள மாநாட்டில் ஐ.நா. மேலாண்மை-சீா்திருத்தக் குழுவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி கிரிஸ் லூ தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளது. இது தொடா்பாக கிரிஸ் லூ ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘ஐ.நா. பயங்கரவாதத் தடுப்பு மாநாட்டில் அமெரிக்கா சாா்பில் பங்கேற்பதை எதிா்நோக்கியிருக்கிறேன். இந்த மாநாடு இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவையும் வலுப்படுத்தும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள், இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தூதா் கிரிஸ் லூ மாநாட்டின்போது எடுத்துரைக்க உள்ளதாக அமெரிக்கா சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com