கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 
கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள இஸ்ரோ மையத்தில், எல்விஎம்3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. 

நேற்று மாலை 4 மணிக்கு 'சிஇ-20' கிரையோஜெனிக் என்ஜின் சோதனை 28 வினாடிகள் நிகழ்ந்தது.

இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த கிரையோஜெனிக் என்ஜின் உதவியுடன்  எல்விஎம்3 ராக்கெட் மூலமாக லண்டனில் தயாரிக்கப்பட்ட 36 OneWeb India-1 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com