குஜராத்தில் முதல்வர் வேட்பாளர் யார்? கேட்கிறார் கேஜரிவால்

பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து, உங்கள் மாநிலத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்று குஜராத் மக்களை கேட்டிருக்கிறார் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்.
குஜராத்தில் முதல்வர் வேட்பாளர் யார்? கேட்கிறார் கேஜரிவால்
குஜராத்தில் முதல்வர் வேட்பாளர் யார்? கேட்கிறார் கேஜரிவால்


பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து, உங்கள் மாநிலத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்று குஜராத் மக்களை கேட்டிருக்கிறார் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்.

குஜராத் மாநிலத்தில் யார் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும்? என்று ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று கேட்கப்பட்டது. அதில் ஏராளமானோர் பகவந்த் மான்-ஐ தேர்வு செய்தனர். அந்தக் கட்சியும் தேர்தலில் அபார வெற்றி பெற்று பகவந்த் மான் முதல்வர் ஆனார்.

சனிக்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கேஜரிவால், குஜராத் மாநிலத்தில் அடுத்த முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது? என்று உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

குஜராத்தில் ஆளும் கட்சியை தாக்கிப் பேசிய கேஜரிவால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற திட்டமெல்லாம் பாஜகவிடம் இல்லை. பணவீக்கம் மிகப்பெரிய பிரச்னையாக நாடு முழுவதும் உள்ளது. குஜராத்திலும் இதே பிரச்னை இருக்கிறது. கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் முதல்வரை மாற்றினார்கள். ஆனால் அது பற்றி மக்களிடம் எதுவும் கேட்கவில்லை. நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம். எப்போதுமே ஆம் ஆத்மி மக்களின் கருத்துகளைக் கேட்கும். இப்போது, குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வரும் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.

உங்கள் கருத்துகளை 6357000360 என்ற எண்ணில் பதிவு செய்யலாம் என்றும், இந்த எண்ணுக்கு வாய்ஸ் மெசேஜ், வாட்ஸ்ஆப், குறுந்தகவல் என எந்த வகையிலும் தொடர்பு கொண்டு நவம்பர் 3ஆம் தேதிக்குள் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் நவம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com