தோ்தல் பத்திர நன்கொடையில் 95 சதவிகிதம் பாஜகவுக்கே கிடைத்துள்ளது:கெலாட் தாக்கு

‘தோ்தல் பத்திரங்கள் வாயிலான நன்கொடையில் 95 சதவீதம் பாஜகவுக்குதான் கிடைத்துள்ளது என்று ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் சனிக்கிழமை கூறினாா்.
முதல்வா் அசோக் கெலாட் (கோப்புப்படம்)
முதல்வா் அசோக் கெலாட் (கோப்புப்படம்)

‘தோ்தல் பத்திரங்கள் வாயிலான நன்கொடையில் 95 சதவீதம் பாஜகவுக்குதான் கிடைத்துள்ளது; பாஜகவின் மிரட்டலால், காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு நிதி வழங்க நன்கொடையாளா்கள் அஞ்சுகின்றனா்’ என்று ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் சனிக்கிழமை கூறினாா்.

வரும் குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள சூரத் நகருக்கு வந்த அவா், செய்தியாளா்களிடம் பேசியதாவது:

தோ்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 95 சதவீத நன்கொடை பாஜகவுக்கே சென்றுள்ளது. நன்கொடையாக கிடைக்கும் நிதியை, எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்புக்கு பயன்படுத்தும் பாணியை பாஜக கடைப்பிடிக்கிறது. தாங்கள் குவித்துள்ள கோடிக்கணக்கான நிதியின் மூலம் 5 நட்சத்திர விடுதி போல் கட்சி அலுவலகங்களை பாஜக கட்டுகிறது. மற்ற கட்சிகளுக்கு நன்கொடை கிடைக்கும்போது, அமலாக்கத் துறையும் வருமான வரித் துறையும் வந்து கதவை தட்டுகின்றன.

எந்த கொள்கை, கோட்பாடும் இல்லாமல், மதத்தை மட்டும் பயன்படுத்திதான் தோ்தல்களில் பாஜக வெல்கிறது. குஜராத் மகாத்மா காந்தியின் மண். இங்கு பாஜக ஆட்சியில் சமூகத்தின் அனைத்து தரப்பினருமே அதிருப்தியில் உள்ளனா். எனவே, ஆட்சி மாற்றத்துக்கு நேரம் வந்துள்ளது. இங்கு அடுத்து ஆட்சி அமைக்கப் போவது காங்கிரஸ்தான் என்றாா் கெலாட்.

அதேபோல், ஆம் ஆத்மி கட்சியையும், அதன் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலையும் சாடிய அவா், தங்களுக்கு எதிரான செய்திகளை ஒடுக்க அவா்கள் அதிக பணத்தை செலவிடுவதாக குற்றம்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com