குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால்...வாக்குறுதிகளை அள்ளி வீசிய அரவிந்த் கேஜரிவால்!

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி உட்பட 6 தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால்...வாக்குறுதிகளை அள்ளி வீசிய அரவிந்த் கேஜரிவால்!

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி உட்பட 6 தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜரிவாலின் இந்த தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

குஜராத்தில் துவாரகா மாவட்டத்தில் விவசாயிகள் கூட்டத்தில் பேசிய அரவிந்த் கேஜரிவால் இதனை அறிவித்தார். 

அந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது: “ ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடம் இருந்து அவர்களது விளைச்சல் அரசின் மூலம் நேரடியாக குறைந்தபட்ச ஆதார விலையினை நிர்ணயித்துப் பெற்றுக் கொள்ளப்படும். பாஜக அரசினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நில அளவீடுகளால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். விவசாயிகளின் நிலங்கள் மீண்டும் சரியான முறையில் நில அளவை செய்யப்படும். ஆண்டுதோறும் குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டாலும் நிர்ணயிக்கப்படும் விலையை விட குறைவான விலைக்கே தங்களது விளைச்சலை விவசாயிகள் விற்கின்றனர். குறைந்தபட்ச ஆதார விலையிக்கு எந்த வியாபாரியும் வாங்கவில்லை என்றால் எங்களது அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளின் விலைபொருட்களை கண்டிப்பாக வாங்கிக் கொள்ளும். இந்த குறைந்தபட்ச ஆதார விலையில் முதலில் கோதுமை, அரிசி,பருத்தி,கொண்டக் கடலை மற்றும் கடலை வாங்கிக் கொள்ளப்படும்.

குஜராத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு மின்சாரம் இரவு நேரத்தில்தான் கிடைக்கிறது என்பது குறித்து அறிந்தேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகல் நேரத்திலும் நீர்பாசனத்திற்காக மின்சாரம் வழங்குவோம். அவர்கள் 12 மணி நேரம் மட்டும் கொடுக்கும் மின்சாரத்தை நாங்கள் 24 மணி நேரத்திற்கும் தருவோம். மாநிலத்தின் முதல்வர் பூபேந்திர படேல் 24 மணி நேரம் மின்சார வசதியினைப் பெற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு  24 மணி நேர மின்சாரம் மறுக்கப்படுவது நியாயமில்லை.

அண்மையில் பாஜக அரசு மாநிலத்தில் நில அளவையினை மேற்கொண்டது. அது சரியான முறையில் நடைபெறவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நிலங்கள் அளக்கப்படும். தவறான அளவைகள் நீக்கப்படும்.

தில்லியில் இயற்கை சீற்றங்களின்போது விவசாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த இழப்பீட்டுத் தொகையை குஜராத்தில் உள்ள விவசாயிகளுக்கும் வழங்குவோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த ஓராண்டில் நர்மதா அணைத் திட்டத்தின் கீழ் வரும் கிராமங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை செய்துத் தருவோம்.

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குஜராத் விவசாயிகளின் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.” என்றார்.

அண்மையில் தில்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி பெரும்பான்மையை நிரூபித்தது. இதனையடுத்து, இன்று (செப்டம்பர் 2) இத்தனை தேர்தல் வாக்குறுதிகளை அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com