புதிய தேசிய கல்விக் கொள்கை வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும்: தர்மேந்திர பிரதான்

புதிய தேசியக் கல்விக் கொள்கை அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வி அளிப்பதும், வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் விதமாகவும் அமைந்திருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 
புதிய தேசிய கல்விக் கொள்கை வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும்: தர்மேந்திர பிரதான்

புதிய தேசியக் கல்விக் கொள்கை அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வி அளிப்பதும், வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் விதமாகவும் அமைந்திருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய கல்விக் கொள்கை ஜி20 கூட்டமைப்பில் கூறப்பட்டுள்ள இலக்கை இந்தியா அடைய ஒரு வழிகாட்டியாக இருக்கும் எனவும் தெரிவித்தார். ஜி-20 கூட்டமைப்பின் சார்பின் கல்வி அமைச்சர்களுக்கான கூட்டம் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: “ தேசிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வியை வழங்குகிறது. ஜி-20 மாநாட்டின் கல்வி தொடர்பான இலக்கை இந்தியா எட்டுவதற்கு இந்த புதிய கல்விக் கொள்கை வழிகாட்டியாக இருக்கும். இந்தக் கல்விக் கொள்கையில் குழந்தைகளுக்கான தொடக்கக் கல்வி மற்றும் மாற்றுத்திறன் படைத்தோருக்கான கல்வி எனப் பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல மாணவர்களிடம் டிஜிட்டல் கல்வியையும் இந்த கல்விக் கொள்கை மூலம் எடுத்துச் செல்லலாம். இந்த கல்விக் கொள்கையின் மூலம் சர்வதேச தரத்தில் இந்தியாவில் கல்வியினை வழங்க முடியும். இந்த புதிய கல்விக் கொள்கை வெளிநாட்டு பல்கலைக்கழங்களை இந்தியாவில் கல்வியளிக்க வழிவகுக்கிறது. அதேபோல ஜி-20 அமைப்பில் உள்ள உறுப்பினர்களுடன் இணைந்து இந்த 21ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான திறமைகளுடன் கூடிய கல்வியை இந்தப் புதிய கொள்கை மூலம் வழங்க முடியும்.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com