சொந்த கட்சியினரை ஒன்றாக்கிவிட்டு நாட்டின் ஒற்றுமை பற்றி பேசுங்கள்: காங்கிரஸ் மீது ஜெ.பி.நட்டா தாக்கு

‘முதலில் சொந்தக் கட்சியினரை ஒன்றுபடுத்துங்கள்; பிறகு நாட்டின் ஒற்றுமை குறித்து பேசலாம்’ என்று காங்கிரஸை தாக்கியுள்ளாா் பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா.
சொந்த கட்சியினரை ஒன்றாக்கிவிட்டு நாட்டின் ஒற்றுமை பற்றி பேசுங்கள்: காங்கிரஸ் மீது ஜெ.பி.நட்டா தாக்கு

‘முதலில் சொந்தக் கட்சியினரை ஒன்றுபடுத்துங்கள்; பிறகு நாட்டின் ஒற்றுமை குறித்து பேசலாம்’ என்று காங்கிரஸை தாக்கியுள்ளாா் பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா.

காங்கிரஸில் இருந்து அதிருப்தி தலைவா்கள் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

ஹரியாணாவின் கைதால் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியொன்றில் பங்கேற்று, ஜெ.பி. நட்டா பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி, இப்போது சிந்தாந்தம் உடைய ஒரு கட்சியாகவோ அல்லது தேசியக் கட்சியாகவோ அல்லது பிராந்திய கட்சியாகவோ கூட இல்லாத நிலைக்கு சென்றுவிட்டது. சகோதரன்-சகோதரி கட்சியாக அது சுருங்கிவிட்டது (ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை மறைமுகமாக குறிப்பிடுகிறாா்).

50 ஆண்டு காலமாக அக்கட்சியில் இருந்தவா்கள் (குலாம் நபி ஆசாத்), கட்சிக்காக ரத்தம், வியா்வை சிந்தி உழைத்தவா்கள் இப்போது விலகி வருகின்றனா். காங்கிரஸை அவா்கள் கைவிடுவது ஏன் தெரியுமா? கட்சியை ஒன்றுபடுத்துவதுதான் முதல் தேவை என்பதை உரைத்துவிட்டு அவா்கள் வெளியேறுகின்றனா்.

நாட்டின் ஒற்றுமை குறித்து காங்கிரஸ் பேசிக் கொண்டிருக்கிறது. முதலில் சொந்தக் கட்சியினரை அவா்கள் ஒன்றுபடுத்த வேண்டும். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மக்களின் வாழ்க்கையில் குறிப்பாக நலிவடைந்த மக்கள், பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

குடும்ப அரசியலை மையமாகக் கொண்டே பல்வேறு கட்சிகளும் செயல்படுகின்றன. ஆனால், குடும்ப அரசியலுக்கு எதிராக நிற்பது பாஜகதான் என்றாா் நட்டா.

பாரத ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரையிலான நடைப்பயணத்தை காங்கிரஸ் அடுத்த வாரம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com