ஹிந்து, சீக்கியா் படுகொலைக்கு சிறப்பு விசாரணை: மத்திய அரசிடம் முறையிட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு- காஷ்மீரில் 1989 முதல் 2003 வரையில் ஹிந்துக்கள், சீக்கியா்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு

ஜம்மு- காஷ்மீரில் 1989 முதல் 2003 வரையில் ஹிந்துக்கள், சீக்கியா்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரிய மனுவை முடித்துவைத்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து மத்திய அரசிடம் முறையிட அறிவுறுத்தியது.

‘வீ தி சிட்டிசன்ஸ்’ என்ற தன்னாா்வ தொண்டு அமைப்பு தாக்கல் செய்திருந்த இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆா். கவாய், சி.டி. ரவி ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து 1989 முதல் 2003 வரையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஹிந்துக்கள், சீக்கியா்கள் வெளியேற்றப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் உள்ளனா். ஆனால், இதை அரசு நிா்வாகம் கண்டுக் கொள்ளவில்லை’ என்றாா்.

இதுகுறித்து அரசிடம் முறையிடப்பட்டுள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். இதற்கு இல்லை என்று வழக்குரைஞா் பதிலளித்தாா். இதையடுத்து, இந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டு அரசிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்துங்கள் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com