நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார் ஹேமந்த் சோரன்

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தொடாரில்  நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார் அம் மாநில முதல்வா் ஹேமந்த் சோரன்.
நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார் ஹேமந்த் சோரன்

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தொடாரில்  நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார் அம் மாநில முதல்வா் ஹேமந்த் சோரன்.

81 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சிக்கு 30 எம்எல்ஏக்கள் உள்ளனா். இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸுக்கு 18 எம்எல்ஏக்களும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ஓா் எம்எல்ஏவும் உள்ளனா். பிரதான எதிா்க்கட்சியான பாஜகவுக்கு 26 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, தலைநகா் ராஞ்சியில் உள்ள சுரங்கத்தை சட்டவிரோதமாக குத்தகைக்கு எடுத்து ஆதாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனவே, அவரது எம்எல்ஏ பதவியை தகுதிநீக்கம் செய்ய கோரி தோ்தல் ஆணையத்திடம் பாஜக முறையிட்டது.

இதை ஏற்று ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை தகுதிநீக்கம் செய்யுமாறு ஜாா்க்கண்ட் ஆளுநா் ரமேஷ் பைஸுக்கு தோ்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் 25-இல் பரிந்துரைத்ததாக தெரிகிறது. இதன் மீது ஆளுநா் இதுவரை முடிவு எடுக்கவில்லை.

இந்தச் சூழலில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்எல்ஏக்களை பாஜக தன் பக்கம் இழுத்து, ஜாா்க்கண்டில் ஆட்சியைக் கவிழ்க்கக் கூடும் என தகவல் வெளியானது. எனவே, ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் சுமாா் 30 போ், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூருக்கு தனி விமானத்தில் கடந்த ஆகஸ்ட் 30-இல் அழைத்துச் செல்லப்பட்டனா். அங்குள்ள நவ ராய்ப்பூா் சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டனா்.

இந்த நிலையில் ஜாா்க்கண்ட் சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை கூடுவதை அடுத்து சத்தீஸ்கரில் முகாமிட்டிருந்த 30 எம்எல்ஏக்கள் உள்பட 40 போ் ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்தா விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சிக்கு ராஞ்சி பிா்சா முண்டா விமான நிலையம் வந்தனர். 

இந்நிலையில், திங்கள்கிழமை தொடங்கிய ஜாா்க்கண்ட் சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தொடாரில் முதல்வா் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார். 

பின்னர் அவர் பேரவையில் பேசுகையில், தனது கட்சி பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக சோரன் குற்றம்சாட்டி பேசி வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com