பெங்களூருவில் கனமழை: மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூருவில் கனமழையின் காரணமாக இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
பெங்களூருவில் கனமழை: மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூருவில் கனமழையின் காரணமாக இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 5ஆம் தேதி இரவு முதல் பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துகொண்டு, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து, வாகனங்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர், படகு மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைக் கடந்து வருகிறார்கள். 8 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மூன்று நகரங்களில் 125 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பெங்களூருவில் சராசரியாக 131 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 

பெங்களூருவில் கனமழையின் காரணமாக இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த 2-3 நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த கன மழையில் எந்த வாகனங்களையும் பதிவு செய்ய முடியவில்லை. பயணம் செய்ய ஒரு கிலோ மீட்டருக்கு 200 ரூபாய் கேட்பதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com