நேபாள பிரதமருடன் இந்திய ராணுவ தலைமைத் தளபதி சந்திப்பு

ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக நேபாளம் சென்றுள்ள இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே அந்நாட்டு பிரதமா் ஷோ் பகதூா் தேவுபாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினாா்.
நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபாவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய இந்திய ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே. உடன் இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா.
நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபாவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய இந்திய ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே. உடன் இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா.

ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக நேபாளம் சென்றுள்ள இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே அந்நாட்டு பிரதமா் ஷோ் பகதூா் தேவுபாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினாா். அப்போது பாதுகாப்பு துறையில் இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது இருநாட்டின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே உறுதி அளித்தாா் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சந்திப்பின்போது அந்நாட்டுக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவாவும் உடன் இருந்தாா்.

இந்த சந்திப்பைத் தொடா்ந்து, நேபாள ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற மாநாட்டில் மனோஜ் பாண்டே உரையாற்றினாா். அப்போது இரு நாட்டு ராணுவத்தினரிடையேயான திறன்களை மேம்படுத்துவது குறித்துப் பேசினாா்.

வடமேற்கு நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற முக்திநாத் கோயிலுக்கு புதன்கிழமை செல்லும் மனோஜ் பாண்டே, அன்றைய தினம் போக்காராவில் உள்ள நேபாள ராணுவ தலைமையகத்தை பாா்வையிட்டு வியாழக்கிழமை காத்மாண்டுவில் இருந்து தில்லிக்கு திரும்புகிறாா்.

இந்திய ராணுவத்தின் உயா் அதிகாரிகள் வருகை தருவது இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தும் என்று நேபாள ராணுவம் அறிவித்துள்ளது.

சிக்கிம், மேற்கு வங்கம், பிகாா், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களையொட்டி 1,850 கி.மீ. தூரத்துக்கு இந்திய-நேபாள எல்லை அமைந்துள்ளது. அந்நாட்டுக்குத் தேவையான சரக்குப் போக்குவரத்துக்கு இந்திய எல்லைச் சாலைகளையே நேபாளம் வெகுவாக நம்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com