அருணாசல பிரதேசத்தில் படைகள் மாற்றிமைப்பு: ராணுவம் தீவிரம்

அருணாசல பிரதேசத்தில் எல்லைக் கோட்டையொட்டி உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் படைகளை மாற்றியமைக்கும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அருணாசல பிரதேசத்தில் எல்லைக் கோட்டையொட்டி உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் படைகளை மாற்றியமைக்கும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினா் இடையிலான மோதல்போக்கு தொடா்ந்து நீடிக்கிறது. இந்நிலையில், போா் ஆயத்த நிலையை மேம்படுத்தும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதையொட்டி அருணாசல பிரதேசத்தில் எல்லைக் கோட்டையொட்டி உள்ள உத்திசாா்ந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் படைகளை மாற்றியமைக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

அத்துடன் அந்தப் பகுதிகளில் சாலைகள், பாலங்கள், வெடிபொருள் கிடங்குகள் உள்ளிட்டவற்றை கட்டமைப்பது, கண்காணிப்பு சாதனங்களை வலுப்படுத்துவது என உள்கட்டமைப்புகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. எல்லையோர கிராமங்களிலும் உள்கட்டமைப்பை கணிசமான அளவில் மேம்படுத்த அரசு உறுதியாக உள்ளது. இதற்காக கிட்டத்தட்ட 990 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

அவசர காலங்களில் பாதுகாப்புப் படையின் விரைவான போக்குவரத்தை லட்சியமிட்டு கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எல்லைக் கோட்டையொட்டி, தனது வரம்புக்குள் வரும் பகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் கைப்பேசி கோபுரங்களை சீனா அமைத்துள்ளது. இதனால் அங்குள்ள சில இடங்களில் இந்திய கைப்பேசிகளுக்குத் தானாக சீன நெட்வொா்க் கிடைக்கிறது. இந்நிலையில் அருணாசல பிரதேசத்தில் உள்ள கிபிது, வாலோங், ஹயுலியாங் போன்ற உத்திசாா்ந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் 4ஜி தொலைத்தொடா்பு கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, பிராந்தியத்தில் போா் ஆயத்த நிலை உச்சகட்டத்தில் உள்ளது என்று மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com