ஒரு வாய்ப்பு கொடுங்கள் மாநிலத்தையே மாற்றிக் காட்டுகிறேன்: அரவிந்த் கேஜரிவால்

ஆதம்பூர் தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்க வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். 
ஒரு வாய்ப்பு கொடுங்கள் மாநிலத்தையே மாற்றிக் காட்டுகிறேன்: அரவிந்த் கேஜரிவால்

ஆதம்பூர் தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்க வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக ஹரியாணா சென்றுள்ள அவர் இதனை தெரிவித்தார். 

ஹரியாணாவில் பேரணி ஒன்றில் கலந்து கொண்ட அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: “ மாநிலத்தில் வருகிற 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க இந்த ஆதம்பூர் இடைத்தேர்தல் ஒரு நுழைவு வாயில் போன்றது. இந்த இடைத் தேர்தல் ஹரியாணா சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் பிஸ்னாய் அவரது பதவியில் இருந்து விலகியதையடுத்து நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான குல்தீப் அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்த இடைத் தேர்தல் மாநிலத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் ஆகும். ஆம் ஆத்மி இந்த இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளது. ஒரு முறை கேஜரிவாலுக்கு வாய்ப்பு கொடுங்கள். என்னால் ஹரியாணாவில் மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை என்றால் என்னை நீங்களே தூக்கி எறிந்துவிடுங்கள்.

மத்தியில் ஆளும் பாஜக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வரி விதித்து நாட்டு மக்களை துன்புறுத்தி வருகிறது. அவர்களால் நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. எனக்கு ஹரியாணாவில் நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள். ஹரியாணாவின் ஹிசாரில் என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் மறக்க முடியாதவை.” என்றார்.

இந்தப் பேரணியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கலந்து கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com