ஆசிரியர் பணியை வரைமுறைப்படுத்திய பஞ்சாப் அரசு: கேஜரிவால் பாராட்டு!

ஆசிரியர் பணியை வரைமுறைப்படுத்தியதற்காக ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பாராட்டியுள்ளார். 
ஆசிரியர் பணியை வரைமுறைப்படுத்திய பஞ்சாப் அரசு: கேஜரிவால் பாராட்டு!

ஆசிரியர் பணியை வரைமுறைப்படுத்தியதற்காக ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பாராட்டியுள்ளார். 

இதுதொடர்பாக கேஜரிவால் கூறுகையில், 

தலைநகரில் தற்காலிக ஆசிரியர் பணிகளை முறைப்படுத்துவதற்கான மசோதாவை தில்லி அரசும் சட்டப்பேரவையில் கொண்டு வந்ததாகவும், ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவர் கூறினார். 

அரசு வேலைகள் குறைக்கப்பட்டு, தற்காலிக பணியாளர்கள் அதிகமாக பணியமர்த்தப்படும் நேரத்தில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் 8,736 ஆசிரியர்களின் பணியை வரைமுறைப்படுத்தியுள்ளார். இது மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்றார். 

தில்லியில் ஆசிரியர்களின் முயற்சியால் கல்விப் புரட்சி ஏற்பட்டது. அனைத்து மாநில அரசுகளும் தற்காலிக ஊழியர்களின் சேவைகளை வரைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் ஆம் ஆத்மி கட்சியின் தரப்பில், எங்கள் அரசாங்கங்கள் எங்கு அமைந்தாலும் தற்காலிக ஊழியர்களை ஒழுங்குபடுத்துவோம் என்று நான் உறுதியளிக்கிறேன் என்று கேஜரிவால் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com