கர்நாடகத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்: அச்சத்தில் மக்கள்!

பெங்களூருவின் அண்டை மாவட்டமான ராம்நகரில் சனிக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெங்களூருவின் அண்டை மாவட்டமான ராம்நகரில் சனிக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இது தொடர்பாக நிலஅதிர்வு மையம் கூறுவதாவது, 

ராம் நகரில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் அடுத்தடுத்து மூன்று நில அதிர்வுகள் உணரப்பட்டன.

மாவட்டம் முழுவதும், குறிப்பாக ராம்நகர் தாலுகாவில் மழை பெய்ததால், மக்கள் நில அதிர்வுகளை உணர்ந்தனர். பெஜ்ஜரஹள்ளிகட்டே, படரஹள்ளி ஆகிய கிராமங்களில் நிலநடுக்கப் பாதிப்பு அதிகமாக உணரப்பட்டது. 

மாவட்ட அதிகாரிகள் கிராமங்களுக்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்.

கனமழையால் கால்நடைகள், பயிர்களை இழந்த மக்கள் நில அதிர்வுகளால் கவலையடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் பொருள் சேதம் மற்றும் உயிர்ச் சேதம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com