ஒடிசாவில் செப்.13 வரை கனமழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுவரும் நிலையில், ஒடிசாவில் செப்டம்பர் 13-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
ஒடிசாவில் செப்.13 வரை கனமழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுவரும் நிலையில், ஒடிசாவில் செப்டம்பர் 13-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடமேற்கு வங்காள விரிகுடாவில் வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசாவின் கடலோரப் பகுதியில் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 13 வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று ஐஎம்டி கணித்துள்ளது. மேலும் செப்டம்பர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் தெற்கு பகுதிகளில் சில இடங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டது.

செப்டம்பர் 10-ஆம் தேதி காலை 8.30 மணி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி காலை 8.30 மணி வரை மல்கங்கிரி, கோராபுட், நபரங்பூர், ராயகடா, கலாஹண்டி, காந்தமால், கஜபதி, கஞ்சம், குர்தா, நாயகர் மற்றும் கட்டாக் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று புபனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .

செப்டம்பர் 11ஆம் தேதி காலை 8.30 மணி முதல் 24 மணி நேரத்திற்கு நபரங்பூர், கலஹண்டி, கந்தமால், நுவாபாடா, போலங்கிர், சோனேபூர், பௌத், நயாகர், பூரி, குர்தா மற்றும் கஞ்சம் ஆகிய மாவட்டங்களில் இதேபோன்ற வானிலை நிலவும். 

நிலைமையை எதிர்கொள்ள அனைத்து ஆட்சியர்கள் தயாராக இருக்குமாறு சிறப்பு நிவாரண ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com