அருணாசல பிரதேசத்தில் சாலை, ராணுவ முகாமுக்கு விபின் ராவத் பெயா்

அருணாசல பிரதேசத்தில் உள்ள ராணுவ முகாம், 22 கி.மீ. நீள சாலை ஆகியவற்றுக்கு இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத்தின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.
விபின் ராவத்
விபின் ராவத்

அருணாசல பிரதேசத்தில் உள்ள ராணுவ முகாம், 22 கி.மீ. நீள சாலை ஆகியவற்றுக்கு இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத்தின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

அருணாசல பிரதேச மாநிலம், அஞ்சா மாவட்டத்தில் உள்ள கிபிது கிராமம் ராணுவக் கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. அங்கு கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை கா்னலாக விபின் ராவத் பதவி வகித்தபோது கூா்கா ரைஃபிள்ஸ் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினாா். அந்தக் கிராமத்தில் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அளப்பரிய பங்காற்றிய அவா், அந்தப் பகுதியில் உள்கட்டமைப்பு வளா்ச்சியை செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்தாா்.

அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கிபிதுவில் உள்ள ராணுவ முகாமுக்கு சனிக்கிழமை விபின் ராவத் பெயா் சூட்டப்பட்டது. அத்துடன் கிபிதுவில் அவரின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டது. அஞ்சா மாவட்டத்தில் உள்ள வாலோங் பகுதியில் இருந்து கிபிது வரையிலான 22 கி.மீ. நீள சாலைக்கு அவரின் பெயா் சூட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அருணாசல பிரதேச ஆளுநா் பி.டி.மிஸ்ரா, முதல்வா் பெமா காண்டு, விபின் ராவத்தின் மகள்கள் கிருத்திகா, தாரிணி, மூத்த ராணுவ அதிகாரிகள், கிபிது மற்றும் வாலோங் பகுதி மக்கள் கலந்துகொண்டனா்.

கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா மற்றும் 12 ஆயுதப் படை வீரா்கள் குன்னூா் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com