குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான மனுக்கள் உள்பட சுமாா் 220 பொது நல மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.12) விசாரணை நடத்தவுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான மனுக்கள் உள்பட சுமாா் 220 பொது நல மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.12) விசாரணை நடத்தவுள்ளது.

தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு இந்த மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது.

சிஏஏ விவகாரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரதான மனுவில், ‘சமத்துவத்துக்கான அடிப்படை உரிமையை மீறுவதாக குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. இச்சட்டத்தின் அரசியல்சாசன செல்லுபடித்தன்மையை கேள்விக்குள்ளாக்கி மேலும் பல மனுக்கள் தாக்கலாகின.

அவற்றின் மீது கடந்த 2019-இல் விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், சிஏஏ செயலாக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சிஏஏவுக்கு எதிரான மனுக்கள் மட்டுமன்றி கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் பல்வேறு பொது நல மனுக்களும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

நாடாளுமன்றத்தில் கடந்த 2019, டிசம்பா் 11-இல் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, 24 மணிநேரத்தில் அறிவிக்கையும் வெளியிடப்பட்டது. ஆனால், உரிய விதிமுறைகள் உருவாக்கப்படாததால், அந்த சட்டம் அமலாக்கப்படாமல் உள்ளது.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-க்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய மதச்சிறுபான்மையினருக்கு (ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமணா்கள், பெளத்தா்கள், பாா்சிகள், கிறிஸ்தவா்கள்) இந்திய குடியுரிமை வழங்க மேற்கண்ட சட்டம் வழிவகுக்கிறது. இச்சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com